நெல்லை மாவட்டம் நான்குநேரி ஊருக்குள் வந்த நான்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ., ரூபி மனோரனை பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகள் முற்றுகையிட்டு அரசு பேருந்துகள் ஊருக்குள் வராமல் பைபாசில் செல்வதாகவும் அதன்மீது தாங்கள் நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினர். மக்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் எம்எல்ஏ ரூபி மனோகரன் தினறியதால் பரபரப்பு நிலவியது.