திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரங்களில் கோடை மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இன்றையை (ஜூன் 11) நிலவரப்படி பாளையங்கோட்டையில் 98. 6 டிகிரி செல்சியஸ் வெப்பத்தின் அளவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர்.