புதிய சாலை பணிகளை தொடக்கி வைத்த பஞ்சாயத்து தலைவர்

57பார்த்தது
புதிய சாலை பணிகளை தொடக்கி வைத்த பஞ்சாயத்து தலைவர்
கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட கேடிசி நகர் பகுதி ஐயப்பாநகர் பகுதிகளில் 15 ஆவது நிதிக்குழு 23 - 24 நிதி ரூபாய் 7. 93 லட்சம் செலவில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து ஐயப்பாநகர் கிழக்கு இரண்டாவது தெருவுக்கு ஊராட்சி பொது நிதி ரூபாய் 5 லட்சம் செலவில் சிமெண்ட்சாலை போடுவதற்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் அனுராதா ரவிமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாலை போடும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் ஸ்ரீலதா பிச்சையா, ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் ஷேக்சிந்தா , அருள்பிரகாசம், ஆசிரியர் மணி, கண்ணன், பாக்கியராஜ் ஜீசஸ், சுந்தரி, ஈசன் பிச்சையா, அரசு ஒப்பந்ததாரர் நாராயணன் முத்துகுட்டி, மகேஷ், முகேஷ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி