நெல்லை மாவட்ட ஆட்சியர் தங்களிடம் மோதல் போக்கை கடைபிடிப்பதாக வருவாய்துறை ஊழியர்கள் சங்கம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் நெல்லை ஆட்சியரை கண்டித்து மாநிலம் முழுவதும் பெருந்திரள் முறையீடு தற்செயல் விடுப்பு போராட்டம் காத்திருப்பு போராட்டம் என அடுக்கடுக்கான போராட்டம் நடத்தப் போவதாக நெல்லையில் இன்று நடந்த தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழுவில் அறிவித்துள்ளடர்.