தீபாவளி பண்டிகை இன்று (அக்டோபர் 31) நெல்லையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னாள் தமிழக விளையாட்டு துறை அமைச்சரும் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான மைதீன்கானை திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜு நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்து பட்டாசு இனிப்புகள் பரிசாக வழங்கினார். இதில் திமுகவினர் உடன் இருந்தனர்.