பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 2 மாதங்களாக திங்கள்கிழமை குறைதீர் முகாம் நடத்தப்படாமல் இருந்தது. அந்த சமயங்களில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டிக்குள் மனு அளித்தனர். இந்நிலையில் தேர்தல் முடிந்து நடத்தை விதிமுறைகள் திரும்ப பெறப்பட்டதால் இன்று மீண்டும் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. எனவே மக்கள் ஏராளமான மனு அளிக்க வந்தனர்.