‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் அடுத்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் நிறுவனர் நாக வம்சி, சமீபத்தில் சூர்யாவை சந்தித்து, வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. ‘கங்குவா’ தோல்விக்கு பிறகு கதை தேர்வில் சூர்யா அதிக கவனம் செலுத்துவதால், இந்த கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.