மத்திய பாஜக அரசை கண்டித்து இன்று திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நெல்லை மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாநில மாணவர் அணி தலைவர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக நெல்லை வருகை தந்ர ராஜீவ்காந்தியை திமுக கவுன்சிலர் ரம்ஜான் வரவேற்றார்.