ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு இன்று(செப்.5) திருநெல்வேலி மாவட்டம் கொண்டாநகரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முகநூல் நண்பர்கள் குழு சார்பில் இனிப்பு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கியும் கேக் வெட்டியும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 130 மாணவ மாணவிகளுக்கு கேக் வழங்கப்பட்டது. இந்த விழாவில் சுத்தமல்லி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமநாதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஆசிரியர்களுக்கு பரிசுகள் இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் செய்திருந்தார்.