நெல்லையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த நிலையில் தற்போது வரை தாழையூத்து அண்டர் பாஸ் பகுதியில் தேங்கிய மழை நீர் வடியாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இதற்கு தாழையூத்து பேரூராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகி கோரிக்கை விடுத்துள்ளனர்.