திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் திருடு போகின்றது. இதற்கு காவல்துறை விழித்து கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பாவி மக்கள் இரு சக்கர வாகனத்தை மீட்டு கொடுக்க வேண்டும். திருடர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என புலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.