திருநெல்வேலி மாநகர ராமையன்பட்டியில் உள்ள குளம் தற்பொழுது பச்சை நிறத்தில் காணப்படுகின்றது. இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் வீடியோ ஒன்று பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சுத்திகரிக்கப்படும் நீர் குளத்தில் கலப்பதால் இந்த நிலைமை ஏற்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த வீடியோவானது இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.