விஜயுடன் கூட்டணி என்ற யூகத்திற்கு எல்லாம் பதில் கூற முடியாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், "அமமுக தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளது. தவெக உடன் கூட்டணி என்ற யூகத்திற்கு எல்லாம் பதில் கூற முடியாது. ஆனால், தேர்தலின் போது தேசிய ஜனநாயக கூட்டணியில் பல கட்சிகள் இணையும். 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும்" என்று கூறியுள்ளார்.நன்றி: புதிய தலைமுறை