திருநெல்வேலி மாவட்டம் விகேபுரத்திலிருந்து அம்பாசமுத்திரம் சென்று கொண்டிருந்த தனியார் மினி பேருந்தில் நேற்று படிக்கட்டில் ஏராளமான மாணவர்கள் தொங்கியவாறு பயணம் செய்துள்ளனர். இதில் ஒரு மாணவன் தவறி கீழே விழுந்ததில் படுகாயம் ஏற்பட்டது. பின்னர் சக மாணவர்கள், பேருந்து ஓட்டுனர் மற்றும் கண்டக்டர் மயக்கம் அடைந்த மாணவனுக்கு தண்ணீர் தெளித்து சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.