திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக மருத்துவர் சுகபுத்ரா புதிதாக பொறுப்பேற்றுள்ளார். அவர் நேற்று பாளையங்கோட்டை மண்டல பகுதிகளில் பொது சுகாதாரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பொதுமக்களிடம் நேரடியாக சென்று பொது சுகாதாரம் குறித்து குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்பொழுது மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.