திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் கொலை முயற்சி வழக்கில் இன்று வழக்கறிஞர் நயினார் முஹம்மதை போலீசார் கைது செய்துள்ளனர். இதனை கண்டித்து நெல்லையில் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டம் நடத்தி வரும் நிலையில் வழக்கறிஞர் நயினார் முஹம்மதை விடுதலை செய்யவில்லை என்றால் தீ குளிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.