நெல்லை மாநகர சங்கர்நகர் மைதானத்தில் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இதில் விளையாடுவதற்காக பிரபல கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நெல்லைக்கு வருகை தந்தார். அவர் பிரபல இருட்டுக்கடை அல்வா கடையில் அல்வா வாங்கி அருந்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த நிலையில் அவர் மேலப்பாளையம் குறித்து பெருமிதத்துடன் பேசிய வீடியோவானது இன்று நெல்லையில் வைரலாகி வருகின்றது.