கர்நாடக மாநிலத்தின் ரமங்கரா மாவட்டத்தை சேர்ந்த பசவா என்ற நபர் நேற்று (டிச. 14) தெருவில் இருந்த நாயை பலாத்காரம் செய்திருக்கிறார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை பிடித்து தாக்கினார்கள். பிறகு பசவா காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். சம்பவம் குறித்து குற்றவாளியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.