2025 மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான மினி ஏலத்தில் 16 வயதுடைய இளம் தமிழக விக்கெட் கீப்பர் வீராங்கனை கமலினியை ரூ.1.60 கோடிக்கு மும்பை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. பெங்களூருவில் நடைபெறும் மினி ஏலத்தில் 91 இந்திய வீராங்கனைகள் உள்பட மொத்தம் 120 வீராங்கனைகள் ஏலத்தில் பங்கேற்கின்றனர். கமலினிக்கு ரூ.10 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கடும் போட்டிக்கு பிறகு மும்பை அணி அவரை ரூ.1.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.