திருநெல்வேலி மாவட்டத்தில் கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனாரின் 153வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இன்று பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள வ. உ. சி திருவுருவ சிலைக்கு சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ஆகியோர் அரசு சார்பில் மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப், திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், முன்னாள் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் லட்சுமணன் உள்ளிட் திமுகவினர், அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.