கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளியில் படிப்பில் ஆர்வமின்றி மிகவும் சோர்வாக இருந்ததால், ஆசிரியர்கள் விசாரித்தபோது, மாணவியை பக்கத்து தெருவில் வசிக்கும் 17 வயது மெக்கானிக் பலாத்காரம் செய்ததும், இதில் மாணவி கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மெக்கானிக்கை கைது செய்தனர். மெக்கானிக்கிற்கு 17 வயதே ஆவதால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்.