மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மசோதா சட்டமாக இயற்றப்பட்டாலும் 2029-ம் ஆண்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தான் சட்டம் நடைமுறைக்கு வரும் என்றும், அதன்படி 2034-க்கு பிறகு தான் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.