தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஜனவரி மாதம் இறுதியில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் உரையாற்றிய இபிஎஸ், "234 தொகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்து திமுக ஆட்சியின் அவலத்தை எடுத்துச் சொல்வோம். 2026-ல் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற சூளுரை ஏற்க வேண்டும். 2026-ல் நமக்கு ஒரு பொற்காலம் காத்துக் கொண்டிருக்கிறது. நிச்சயம் அதிமுக ஆட்சிக்கு வரும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.