நெல்லை மாவட்ட ஆட்சியர் டாக்டர் கார்த்திகேயன் உத்தரவுப்படி நெல்லை மாவட்ட சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் டாக்டர் ராஜேந்திரன் அறிவுறுத்தலின்படி நாங்குநேரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்முத்துலட்சுமிதலைமையில் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட இளங்குளம் மற்றும் பரப்பாடி பகுதியில்காய்ச்சல் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இலவசமாக காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இந்தமுகாமில் இளநிலை பூச்சியில்வல்லுநர் மணிகண்டன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், நம்பிராஜன், சுகாதாரஆய்வாளர், அமல்குமார், பாண்டிதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் கொசுவை ஒழிப்பதற்காக கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டது.