இந்து சமய அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ வழிவிடு விநாயகர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவராக 13 வது வட்ட திமுக பிரதிநிதி முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் இன்று 21/02/24 டவுனில் உள்ள நெல்லை மாநகர திமுக அலுவலகத்தில் மாநகர செயலாளர் சுப்பிரமணியனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று பல்வேறு ஆலோசனைகளை பெற்றார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.