திருநெல்வேலி மாவட்டம் கொண்டாநகரத்தில் இன்று (ஜூன் 10) மின் பகிர்மான கழகத்தின் ஏடி நேரில் ஆய்வு மேற்கொண்டு இரண்டு டிரான்ஸ்பார்மர் அமைத்து தருவதாக அப்பகுதி மக்களிடம் வாக்குறுதி அளித்தார். இதனை தொடர்ந்து மின் பகிர்மான கழகத்தினருக்கு கொண்டாநகரம் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.