நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருபவர் செல்வம் என்பவரின் மகன் மாரியப்பன். இவருடைய ஹோட்டலுக்கு அடிக்கடி வந்து தகராறு செய்த பாப்பாகுடி மாரியப்பன் என்பவரை ஹோட்டலுக்குள் அனுமதிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த மாரியப்பன் அவதூறாக பேசி தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில் முக்கூடல் போலீசார் பாப்பாக்குடி மாரியப்பனை கைது செய்தனர்