சின்னாறு நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறப்பு

51பார்த்தது
சின்னாறு நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறப்பு
தருமபுரி: பாலக்கோடு அருகே சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பழைய ஆயக்கட்டு பகுதி 5 ஏரிகளை நிரப்பி, புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு 03.01.2025 முதல் 22.05.2025 வரை 140 நாட்களுக்கு பாசனத்திற்கு என மொத்தம் 395.33 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் பாலக்கோடு, பஞ்சப்பள்ளி கிராமம், உட்பட 13 கிராமங்களில் உள்ள பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பு மொத்தம் 4,500 ஏக்கர் நிலம் பயன்பெறும்.

தொடர்புடைய செய்தி