கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில்டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கோவை, அவிநாசி ரோடு மேம்பாலத்தில் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. டேங்கரில் இருந்து எரிவாயு வெளியேறி வருவதால் தீயணைப்புத் துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீ விபத்து ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.