நெல்லை மாவட்டம் பாபநாசம் காரையாரு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அம்மாவாசை திருவிழா ஆகஸ்டு 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் இவ்விழாவிற்கு பக்தர்கள் செல்ல இன்று அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் பக்தர்கள் இன்று முதல் கோவிலுக்கு செல்ல அனுமதி அளித்தனர்.