நெல்லை வண்ணாரப்பேட்டையில் மத்திய அரசின் இஎஸ்ஐ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இம்மருத்துவமனைக்கு எம்பி ராபர்ட் புரூஸ் திடீர் ஆய்வுக்கு வந்தார். அப்போது மருத்துமனையில் நோயாளிகளிடம் சிகிச்சை முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். பின்னர் மருத்துவ உபகரணங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.