நெல்லூரில் பிறந்து வளர்ந்த எஸ்.பி.பி-க்கு தெலுங்கு தாய் மொழியாகும். ஆரம்பத்தில் அவருக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக வரவில்லை. எம்.எஸ்.வி-யிடம் வாய்ப்பு கேட்டு அணுகிய போது, தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை என்றும், நன்றாக கற்றுக் கொண்டு வரும்படி அவரை எம்.எஸ்.வி திருப்பி அனுப்பி உள்ளார். எனவே தீவிர முயற்சி செய்து, எந்த மொழியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதோ அதே மொழியில் பின்னர் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி சாதித்து காட்டினார் எஸ்.பி.பி.