திருநெல்வேலி பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் இன்று அதிகாலை எட்டுத்தொகை தெருவில் ஸ்டீபன் என்பவரின் வீட்டில் மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்து 1020 மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து திருநெல்வேலி மதுவிலக்கு காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு லட்சக்கணக்கான ரூபாய் என கூறப்படுகிறது.