பெண்கள் ஜீன்ஸ் உள்ளிட்ட இறுக்கமான ஆடைகளை அணியும்போது காற்று உட்புகாமல், பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது. எனவே, ஜீன்ஸ் உடையை தொடர்ந்து அணியாமல் அவ்வப்போது தளர்வான ஆடைகளையும் அணிவது நல்லது. அதிக வெப்பமான இடங்களில் பணியாற்றுவோர் அல்லது வெயிலில் வெளியே செல்ல வேண்டியவர்கள் ஜீன்ஸ் அணிவதைக் குறைத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், பெண்கள் ஜீன்ஸ் அணியும்போது கால்களை மடக்கி அமர்வதைத் தவிர்க்க வேண்டும்.