அட்ஜஸ்ட் பண்ண சொல்றாங்க.. நடிகை ஆதங்கம்!

1064பார்த்தது
அட்ஜஸ்ட் பண்ண சொல்றாங்க.. நடிகை ஆதங்கம்!
ராட்சசன், அசுரன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அம்மு அபிராமி. சமீபத்தில் வெளியான ’’கண்ணகி’’ படத்தில் அம்மு அபிராமி முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். படம் தொடர்பான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், பல கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுக்கிறார்கள். ஆனால் படப்பிடிப்பிற்காக வெளியே செல்லும்போது சரியான பாத்ரூம் வசதி கூட இல்லாமல் அவதிப்படுகிறோம். பாத்ரூம் போகவும், உடை மாற்றவும் சிரமமாக உள்ளது. கேட்டால் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுமாறு கூறுகிறார்கள் என அவர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி