தமிழ்த் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அவர்களின் புதல்வரும், நடிகருமான மனோஜ் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். "மனோஜ் இளம் வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாரதிராஜாவுக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.