பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி குளியல்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு முற்றிலும் இல்லாத நிலையில் கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு குறைந்து தற்பொழுது நீர் வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் 4 நாட்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளித்ததை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்து அருவியில் குளித்து மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.