தேவதானப்பட்டி அருகே காட்டு மாடு வேட்டையாடிய 8 பேர் கைது
தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே உள்ள புலியோடை பகுதியில் காட்டுமாடு வேட்டையாடப்பட்டு உடல் பாகங்கள் தனித்தனியே எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். இதில் நாகராஜ், பிரபாகரன், வேல்முருகன், ஆண்டவர், சுரேஷ், சுந்தரம், ராஜபாண்டி, முகமது யூனிஸ் ஆகிய 8 பேரை தேவதானப்பட்டி வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.