கூடலூர் கார்டன் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் கூடலூர் என். எஸ். கே பொன்னையா கவுண்டர் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுடன் லோயர்கேம்ப் அரசு தொடக்கப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா மற்றும் சிறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், மாணவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.