தேனி மாவட்டம் சின்னமனூர் விஏஓ அந்தோணி ஜெயக்குமார், அவரது உதவியாளர் தினேஷ் என்பவருடன் நேற்று காலை கிராம ரோந்து சென்ற போது சின்னமனூர் நகராட்சி அலுவலகம் எதிரே ஒருவர் இறந்து கிடப்பதை கண்டார். இது குறித்து விசாரித்ததில் 60 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் சடலம் என்பது தெரியவந்தது. விஏஓ சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.