கூடலூர் நகராட்சி வனப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட விவசாயிகள் பிரச்னை தொடர்பாக, வார்டு குழு, பகுதி சபா கூட்டம் நேற்று (அக். 4) நடைபெற்றது. கூட்டத்தில் கூடலூர் அருகேயுள்ள ஆசாரிப்பள்ளம், அமராவதி, பாண்டிக்காடு, சுரங்கனார் பீட், லோயர்கேம்ப் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்களது கோரிக்கைகள் குறித்து கூடலூர் நகராட்சி அதிகாரிகள் கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.