கம்பம் தனியார் பள்ளியில் ஆண்டு விழா

58பார்த்தது
கம்பம் தனியார் பள்ளியில் ஆண்டு விழா
தேனி மாவட்டம் கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தாளாளர் எஸ். காந்தவாசன் தலைமை தாங்கினார்.
இணை செயலர் சுகன்யா , முத்தையா பிள்ளை நினைவு மேல்நிலைப்பள்ளி தாளாளர் மகுடகாந்தன் முன்னிலை வகித்தார். முதல்வர் புவனேஸ்வரி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு டாக்டர். எம். ஜி. ஆர். மருத்துவ கல்லூரி இதயவியல் பேராசிரியர்(ஓய்வு) டாக்டர் சொக்கலிங்கம் கலந்து கொண்டு பேசினார்

நேர்மறை எண்ணங்கள் மனதைத் தென்றலைப்போல் வைத்துக்கொள்ளும். ஆனால், எதிர்மறை எண்ணங்கள் நம் மனத்தைத் தவறான பாதையில் வழிநடத்தத் தொடங்கிவிடும். எண்ணங்கள்தாம் நம் வாழ்க்கை ஆகிறது. அதனால் எண்ணங்கள் மேம்பட வேண்டும்.

ஆவதும் மனத்தால்தான் அழிவதும் மனத்தால்தான் நம் மனவலிமைதான் நம்மைத் தீர்மானிக்கிறது. அந்த மனம் நல்ல நிலையில் இருக்க மூன்று 'உ'க்களைக் கடைப்பிடிக்கவேண்டும். உணர்வு, உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றில் முறையான வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே போதும் 100 வருடம் குறையின்றி மகிழ்ச்சியுடன் வாழலாம் என்றார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி