மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்த ஆசிரியர்கள்

55பார்த்தது
மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்த ஆசிரியர்கள்
உப்புக்கோட்டை அருகே உள்ள பாலார்பட்டியில் அமைந்துள்ளது அரசு கள்ளர் நடுநிலை பள்ளி இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவமாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது இதனைத்தொடர்ந்து 1ம் வகுப்பில் புதிதாக சேர்க்கப்பட்ட 15 மாணவமாணவிகளுக்கு தலையில் பரிவட்டம்கட்டி, கழுத்தில் மாலைஅணிவித்து, கையில் கும்பத்துடன் கர்னல் ஜான் பென்னி குக் மண்டபத்தில் இருந்து ஊரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து பள்ளியின் முன்பு தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் ஆரத்தி எடுத்து இனிப்பு மற்றும் பூக்கள் வழங்கி வரவேற்பு வழங்கினர். இதில் ஆசிரியை தெய்வசங்கரி, கலையரசி, முருகன் முருகையா மற்றும் பெற்றோர்கள், பொது மக்கள் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி