மக்கள் தொடர்பு திட்ட முகாம் - ஆட்சியர் தகவல்

52பார்த்தது
மக்கள் தொடர்பு திட்ட முகாம் - ஆட்சியர் தகவல்
தேனி மாவட்டம் சோலையூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு
திட்ட முகாம் 12. 06. 2024 அன்று நடைபெற உள்ளது. தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், சோலையூர் கிராமத்தில் 12. 06. 2024 புதன்கிழமையன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. போடிநாயக்கனூர் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை (பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை கோருதல், புதிய குடும்ப அட்டை கோருதல், ஆதி திராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, விபத்து நிவாரணம், விவசாயத்துறை, போக்குவத்துத்துறை மற்றும் இதர துறைகள்) 12. 06. 2024-ஆம் தேதியன்று நேரில் மனுவினைக் கொடுத்து பயன்பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். வி. ஷஜீவனா, இ. ஆ. ப. , அவர்கள் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you