தேனி எம்பிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு

60பார்த்தது
தேனி மாவட்டம் போடியில் தேனி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் போடி நகர் பகுதியில் உள்ள தெருக்களில் வீடு வீடாக சென்று வாக்களிக்க பொது மக்களுக்கு நகரச் செயலாளர் புருசோத்தமன் தலைமையில் நன்றியை தெரிவித்தார். வருகை புரிந்த தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு போடி திமுக நகர செயலாளர் புருசோத்தமன் தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்வில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் போடி நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தேனி திமுக வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆசிப் கான், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கர் பொதுக்குழு உறுப்பினர் ராஜரமேஷ் மற்றும் திமுக நகர் கழக நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி