போடி நகர் போலீஸார் அதிரடி வேட்டை

1086பார்த்தது
போடி நகர் போலீஸார் அதிரடி வேட்டை
தேனி மாவட்டம் போடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கண்ணன் சக போலீசாருடன் போதை பொருள் தடுப்பு சம்பந்தமாக ரோந்து சென்றார். அப்போது தேவர் சிலை அருகே வாகன தணிக்கை செய்தபோது பெரோஸ்கான், சுதாகர் ஆகியோர் வந்த டூவீலரை சோதனை செய்தார்.

சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 18920 மதிப்புள்ள 35 கிலோ குட்கா பொருட்கள், அதை விற்ற பணம் ரூ. 30000 ஆகியவற்றை கைப்பற்றி போலீஸார் இருவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி