ராட்சச கிரேன் மூலம் மாலை அணிவித்து வரவேற்பு

558பார்த்தது
தேனி மாவட்டம் போடியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன். MP அவர்கள் போடிநாயக்கனூருக்கு வருகை தந்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்பொழுது 20வது பகுதிக்கு வருகை தந்து வ. உ. சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை வரவேற்ற திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் இருபதாவது பகுதி நகர்மன்ற உறுப்பினர் PSP. மகேஸ்வரன் ராட்சச கிரேன் மூலம் 100 கிலோ எடை கொண்ட ரோஜா மாலையை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் போடி திமுக நகர செயலாளர் புருஷோத்தமன் நகர மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் மற்றும் நகரக் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி