தேனி மாவட்டம் தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பழைய கட்டடத்தை இடித்து விட்டு தற்போது புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலர் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா, தேனி ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் சக்கரவர்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.