மக்கள் நல பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

73பார்த்தது
மக்கள் நல பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுதர்சன் தலைமையிலும் மாவட்ட தலைவர் போஸ் என்ற மலைச்சாமி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 1990ல் கலைஞர் அரசால் பணி நியமனம் செய்யப்பட்டு அதிமுக அரசால் மூன்று முறை பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நல பணியாளர்களுக்கு திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி கடந்த 19. 8. 2014 அன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அமுல்படுத்தி வாழ்வளிக்க வேண்டிய 02. 07. 1990 முதல் 33 வருடங்களுக்கு முன்பு அரசு பணியில் சேர்ந்து மனிதாபிமானமற்ற அதிமுக அரசால் மூன்று முறை பணிநீக்கம் செய்யப்பட்டதால் 33 வருடங்களில் சுமார் 12 வருடங்கள் பணிபுரிந்தும் 21 வருடங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளோம் அதனால் பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும் மாதம் 50 வயதை கடந்த பணியாளர்களுக்கும் சுய விருப்பத்தின் அடிப்படையில் ரூ. 5 லட்சம் குடும்ப நிவாரண நிதியும் மற்றும் அவர்களை வாரிசுகளுக்கு வேலை வழங்கி காப்பாற்ற வேண்டியும் , இத்துடன் 6 தீர்மானங்கள் ஆர்ப்பாட்டத்தின் போது நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி