கம்பம் நியோமேக்ஸ் நிர்வாகி வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்

4688பார்த்தது
கம்பம் நந்தகோபாலன் தெருவில் உள்ள நியோமேக்ஸ் நிறுவனத்தின் மண்டல தலைவர் வீட்டை பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகை

தேனி மாவட்ட கம்பம் சுற்று வட்டாரம் நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நலச்சங்க தலைவர் சங்கர், துணைத் தலைவர் பொம்மையசாமி, செயலாளர் மணிகண்டன் தலைமையில் சுமார் 30 பேர்கள் இரவு நந்தகோபால்சாமி தெருவில் வசித்து வரும் நியோமேக்ஸ் நிறுவனத்தின் மண்டல தலைவர் தொட்டுசிக்கு என்பவர் வீட்டுக்கு சென்றனர்,

அவரிடம் நீங்கள் தானே நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய பணம் வாங்கினீர்கள், எங்களுக்கு திருப்பி கொடுங்கள் என்று வீட்டை முற்றுகையிட்டனர்.

தகவல் கிடைத்ததும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் போலீஸ் நிலையத்திற்கு தொட்டுசிக்கு மற்றும் நியோமேக்ஸ் நிறுவனத்தில் முலீடுசெய்து பாதிக்கப்பட்ட நபர்களை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பேசிய சப் -இன்ஸ்பெக்டர் நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடுசெய்து பாதிக்கப்பட்ட நபர்களின் பெயர் , டெபாசிட் செய்த தொகை அடங்கிய பட்டியலை கொண்டு வருமாறு தெரிவித்தார். இதையடுத்து நியோமேக்ஸ் நிறுவனத்தில் முலீடுசெய்து பாதிக்கப்பட்ட நபர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி